தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2020, 10:25 AM IST

ETV Bharat / state

நீலாங்கரை குப்பம் பகுதி மக்களுக்கு உதவிய ஏடிஜிபி!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட நீலாங்கரை குப்பம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு ஏடிஜிபி ரவி வழங்கினார்.

ஏடிஜிபி ரவி  adgp ravi  ADGP ravi  சென்னை செய்திகள்  நீலாங்கரை குப்பம்  tamilnadu police news
நீலாங்கரை குப்பம் பகுதிமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய ஏடிஜிபி

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், பலதரப்பட்ட மக்களும் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளதோடு பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளனர். இதனால், தன்னார்வலர்கள், காவலர்கள் பலரும் முன்வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரை குப்பம் பகுதியில் வசிக்கும் சுமார் 250 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு ஏடிஜிபி ரவி வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை தனது வீட்டிற்கு அழைத்து தகுந்த இடைவெளியைப் பின்பற்றச் செய்து அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய ஏடிஜிபி ரவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:கொஞ்சம் கூட சிந்தனை இல்லாத அரசால் மக்களுக்கு என்ன பயன்? - திமுக தலைவர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details