தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு - madras high court

சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பி.டி. ஆஷா உள்ளிட்ட எட்டு நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கூடுதல் நீதிபதிகள்  நீதிபதிகள் பதவியேற்பு  உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி  madras high court  Additional judges sworn in as permanent judges
எட்டு கூடுதல் நீதிபதிகள் நிரந்திர நீதிபதிகளாக பதவியேற்பு

By

Published : Mar 17, 2020, 3:01 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட, பி.டி. ஆஷா, எம். நிர்மல்குமார், என். ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே. இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி. சரவணன், பி. புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய ஒன்பது பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்று ஒன்பது நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இவர்களில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டதால், மீதமுள்ள எட்டு நீதிபதிகளும், இன்று நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது, 21 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: அவரச வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்

ABOUT THE AUTHOR

...view details