தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாழ்க்கையில் பல பிரச்சினைகளை பார்த்துள்ளேன்' - நடிகை வனிதா - etv bharat

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா
நடிகை வனிதா

By

Published : Aug 28, 2021, 4:24 PM IST

சென்னை: கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3இல் நடிகை வனிதா விஜயகுமார் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு அவர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருக்கும், நடுவர் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே போட்டி தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது.

இதனால் வனிதா, அந்நிகழ்ச்சியிலிருந்து மட்டுமின்றி அந்த தொலைக்காட்சியிலிருந்தும் விலகினார்.

நடிகை வனிதா

பிரபல தொலைக்காட்சியில் வனிதா

இந்நிலையில் இவர் தற்போது, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னி தீவு நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஷகிலா, ரோபோ சங்கர், ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகை வனிதா

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் நடிகை வனிதா விஜயகுமார் கூறுகையில், "பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான்.

நடிகை வனிதா

மரியாதை இல்லை

அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.

நடிகை வனிதா

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன்

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை.

நடிகை வனிதா

சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கின்றன என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள்.

அனைவருமே நிறையச் சுதந்திரம் கொடுத்துவிட்டது மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கருத்துகளை எல்லாம் பார்த்து வருந்தத் தொடங்கினால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது" என்றார்.

இதையும் படிங்க:வெளியேறிய வனிதா... பிரபல சேனலில் இருந்து விலகி மற்றொரு சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details