சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இயங்கி வருகிறார்.
புரசைவாக்கம் வைகோகாரன் தெருவை சேர்ந்த ஷாலு ஷம்மு, கடந்த ஜனவரி மாதம் 2 லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
பின்னர் பார்ட்டியை முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் நண்பர்களுடன் இணைந்து சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் ஷாலு ஷம்மு தங்கி உள்ளார். பின்னர் ஏப்ரல் 10ஆம் தேதி காலை எழுந்து பார்த்த போது ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நண்பர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.