சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலம் அடைந்தவர், ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதன் மூலம் அதிக ஃபாலோவர்ஸ்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷாலு ஷம்மு கடந்த 9ஆம் தேதி ஈஸ்டர் நாளில், சென்னை - எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு, பின்னர் சூளைமேட்டில் தனது நண்பர்களுடன் தங்கியபோது, அவரது புதிய 2 லட்சம் மதிப்புடைய ஐபோன் காணாமல் போனது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நடிகை ஷாலு ஷம்மு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்தார்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாலுவின் நண்பரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஐகிளவுடு மூலமாக செல்போன் காணாமல் போன இடத்தை கண்டுபிடித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார், ஷாலு ஷம்மு. இந்த நிலையில் நேற்று ஷாலு ஷம்முவிற்கு டன்சோ நிறுவனத்திலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளது.