கரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக திரைப்பட நடிகர், நடிகைகள் ஏராளமானவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி! - sanam shetty
சென்னை: கரோனாவால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு ’நம் மக்களின் குரல்’ என்ற குழு மூலம் நடிகை சனம் ஷெட்டி உதவிகளை செய்து வருகிறார்.
anam
அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டி விளிம்புநிலை மக்களுக்கு உதவும் வகையில் 'நம் மக்களின் குரல்' என்ற சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்மூலம் பல்வேறு வகையிலான உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சனம் ஷெட்டியின் நம் மக்களின் குரல் என்ற சமூக நலத்திட்ட குழுவும், ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து குறவர் இனத்தை சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முகக்கவசங்கள், ரேசன் பொருள்களை வழங்கினர்.