சென்னை:நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியை காண ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று (ஜன.11) நடிகை ராதா, விஜயகாந்த் சமாதிக்கு வந்து தனது அஞ்சலியை கண்ணீர் மல்க செலுத்தினார். அதனை தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அவர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் - நடிகர் ராகவா லாரன்ஸ்!