தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார் அவரிடம் இருந்து என்ன காப்பாத்துங்க... நடிகை நிலானி மீண்டும் 'பராக்' - மஸ்கட்

சென்னை: திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை நிலானி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

nilani

By

Published : Jun 20, 2019, 9:27 PM IST

Updated : Jun 24, 2019, 2:53 PM IST

சின்னத்திரை நடிகையான நிலானி என்பவருக்கும், உதவி இயக்குநர் காந்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட, காந்தி தற்கொலை செய்துகொண்டார். அதற்கு நிலானிதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் நிலானி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு என்னைப் பற்றி வெளியான செய்தியினையடுத்து, பலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறி தொலைபேசியில் பேசினர்.

அப்போது வெளிநாட்டில் இருந்து மஞ்சுநாதன் என்பவரும் பேசினார். பின் அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிப் பழகினார். இந்நிலையில் மஞ்சுநாதன் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவ்வப்போது என்னைக் காண வந்தார்.

ஆனால் மஞ்சுநாதன் ஏற்கனவே திருமணமானவர் என்பது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து அவருடனான நட்பை துண்டித்துவிட்டேன். ஆனாலும் அவர் எனக்கு தொடர்ந்து போன் செய்து வருகிறார். மேலும் ஆபாச குறுஞ்செய்திகளும் அனுப்புகிறார்.

அதுமட்டுமல்லாது அவரது தொலைபேசியில் எனது அந்தரங்க வீடியோவை பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டியும் வருகிறார். இதனால் என்னுடைய வாழ்க்கை பாதிக்கும், அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததாக கூறினார்.

Last Updated : Jun 24, 2019, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details