சென்னை: சமூக வலைத்தளத்தில் பட்டியல் இனமக்கள் குறித்து அவதூறான வகையில் பேசி, நடிகை மீரா மிதுன் காணொலி வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
பிணை கேட்டு மனு
தொடர்ந்து இருவரும் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அவர்கள் பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தமனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 35 நாள்களுக்கும் மேலாக மீரா மிதுன் சிறையில் இருப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அவர் சோர்வாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிபந்தனை பிணை
இதையடுத்து நடிகை மீரா மிதுன், அவரது நண்பருக்கு நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (செப்.25) காலை 10.30 மணிக்கு நடிகை மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க:'சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்'- கமல்ஹாசன்