திரைப்பட நடிகை அமலா பாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பவ்னிந்தர் சிங் என்பருக்கும் ராஜஸ்தானில் 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்: சமூக வலைதளங்களில் வெளியிட தடை
11:40 November 20
சென்னை: நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட முன்னாள் ஆண் நண்பருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலா பாலுக்கும் தனக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கூறி, நிச்சயதார்த்தத்தின்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்தப் புகைப்படங்கள் அமலா பாலின் எதிர்ப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடமிருந்து இழப்பீடு கேட்டு அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்குக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு டிசம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் பவ்னிந்தர் சிங்கிற்கு உத்தரவிட்டார்.