நெஞ்சுவலி காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டுவருகிறது.
நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை - நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை
12:01 April 16
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இவர் நேற்றுதான் (ஏப்ரல் 15) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. விவேக்கிற்கு வயது 59. திரைப்படங்களில் சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகளின் மூலம் இவர் சின்னக் கலைவாணர் என்று ரசிகர்கள் அழைக்கப்படுகிறார்.
எக்மோ சிகிச்சை என்றால் என்ன?
எக்மோ அல்லது பிரித்தேற்ற சவ்வு ஆக்சிஜனேற்றம் (Extra Corporeal Membrane Oxygenation-ECMO) எனப்படுவது, தீவிர மூச்சுத் திணறல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல், இதயம் முழுமையாகச் செயல்படாது.
அப்போது, எக்மோ என்ற அதிநவீன கருவியின் உதவி மூலம் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, பிராண வாயு நுரையீரலுக்கு அனுப்பப்படும். இதனால் மூச்சுவிடுதலும், ரத்த ஓட்டமும் தடைபடுவது நிறுத்தப்படும்.