சென்னை: கமர்ஷியல் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள பிரம்மா முகூர்த்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதியும், நடிகரும், இயக்குநருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.
இயக்குநர் டி.ஆர் விஜயன் இயக்கத்தில், பி.செந்தில்நாதன் கே.வி மீடியா சார்பின் தயாரிப்பில் இப்படமானது உருவாகியுள்ளது. காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.