தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vijay Antony Daughter: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் மரணம்! - லாரா விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 7:23 AM IST

Updated : Sep 19, 2023, 11:39 AM IST

சென்னை:இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (செப். 18) இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று (செப். 19) அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், வீட்டில் உள்ள பணியாளர் உதவியுடன் தனது மகளை மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி ஏறத்தாழ உயிர் பிழைத்து வந்தார். இந்நிலையில் அவரது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : Sep 19, 2023, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details