தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சூரி நில மோசடி வழக்கு: 2ஆவது முறையாக ஊராட்சித் தலைவரிடம் விசாரணை

சென்னை: நடிகர் சூரி அளித்த நில மோசடி தொடர்பான புகாரில் சிறுசேரி ஊராட்சி மன்றத் தலைவர், அவரது சகோதரரிடம் காவல் துறையினர் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர்.

நடிகர் சூரி நில மோசடி வழக்கு விசாரணை
நடிகர் சூரி நில மோசடி வழக்கு விசாரணை

By

Published : Nov 19, 2020, 7:15 PM IST

நடிகர் சூரி 2015ஆம் ஆண்டு 'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், சூரிக்கு தர வேண்டிய சம்பள தொகையான 40 லட்ச ரூபாயை வழங்காமல் இருந்துள்ளார். சம்பள தொகைக்கு பதிலாக சூரிக்கு சிறுசேரி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் ஐந்து கோடி ரூபாய்க்கு விலை பேசி சமபளத்தொகை போக மீதியை தரும்படி கேட்டுள்ளனர். அதன்படி சூரி அந்த மனையை சென்று பார்த்துள்ளார்.

பின்னர் மனைக்குச் சரியான பாதை இல்லை என்றும், குறைவாக விலைக்கு இடத்தை வாங்கி அதிகமாக விலைக்கு ஆவணங்களை போலியாக தயாரித்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறி தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து 2018ஆம் ஆண்டு குறிப்பிட்ட தொகையை அன்புவேல் ராஜனும், ரமேஷ் குடவாலாவும் திரும்ப வழங்கியுள்ளனர். அதுபோக மீதமுள்ள சுமார் 2.70 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றியதாக சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அழைப்பாணை அனுப்பி விசாரணையும் நடத்தினர். பின்னர் இந்த மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற டிஜிபி தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குறிப்பிட்ட இடம் மனை நிலம் என சான்றிதழ் அளித்த சிறுசேரி கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பரத்தை இரண்டாவது முறையாக அடையாறு காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்வதன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நடிகர் சூரிக்கு விற்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 2.50 கோடி மதிப்புடையது. நடிகர் சூரி வாங்கிய நிலத்தில் பாதை அமைய வாய்ப்பில்லை என ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பரம் தெரிவித்தார். இதேபோல் அவரது சகோதரர் வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் சூரி நில மோசடி வழக்கு: ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details