தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கமலுடனான நட்பை கெடுத்து விடாதீர்கள்' - ஊடகங்களுக்கு ரஜினி கோரிக்கை! - media peoples

சென்னை: என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. கமல் ஆதரவு கேட்டது குறித்து இதற்குமேல் எதுவும் பேச விரும்பவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கி, எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

ரஜினி-கமல் நட்பு

By

Published : Apr 9, 2019, 2:46 PM IST

'பேட்ட' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்திற்கு 'தர்பார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை 8.30 மணியளவில் வெளியானது. தற்போது சமூக வலைதளங்களில் தர்பாரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, ரஜினி தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு, என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இதற்குமேல் இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கி, எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்றார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'மக்களவைத் தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. இதில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். ஏனெனில் தேசிய நதி நீர் இணைப்பு குறித்து பல ஆண்டுகளாக பேசிவருகிறேன். இது குறித்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். இந்த திட்டத்திற்கு பகீரத்யோஜனா என்று பெயர் வைக்கும்படியும் கூறினேன். பகீரத்யோஜனா என்றால் சாத்தியம் ஆகாததை சாத்தியம் ஆக்குவதான் பொருள். இதைக்கேட்டு இது பெரிய திட்டம் என்று புன்னகைத்தார் வாஜ்பாய்.

தேர்தலில் வென்று மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், முதல் வேளையாக நதிகள் இணைக்க வேண்டும். அது நடந்தால், நாட்டில் உள்ள வறுமை நீங்கும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வு உயரும். விவசாயமும் நல்லவிதமாக இருக்கும். அதை அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது தேர்தல் நேரம். மிகவும் சென்சிட்டிவ் ஆன நேரம். அதனால் அதிகம் பேச விரும்பவில்லை.

தர்பார் என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது' என்று முடித்துக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details