இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு (Jailer Movie) பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நேபாளத்தில் நடக்கும் இப்படத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பிற்காக டெல்லி வழியாக செல்ல ரஜினிகாந்த் இன்று சென்னை விமானநிலையத்தில் வருகை தந்திருந்தார். அப்போது, அவரது ரசிகர் ஒருவர், 'தலைவா! வணக்கம். நிரந்தர சூப்பர் ஸ்டார் வாழ்க' என்றார். அதற்கு உடனே 'ஒழுங்கா வேலையை பாரு' என சொல்லும் வகையில் அன்பாக ரசிகரை மிரட்டி அறிவுரை சொல்லி சென்றார்.