மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினர் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' மூலம் பல நட்சத்திரங்கள் வாழ்த்து செய்திகளை காணொலியாக வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து செய்திக் காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'ஒரு நடிகனாக நான் பெயர், புகழ், நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதற்குக் காரணம் இயக்குநர் கே.பாலசந்தர்.