தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட நடிகர் பிரபு - pookadai police station history in tamil

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல் நிலையத்தை நடிகர் பிரபு பார்வையிட்டார்.

சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட நடிகர் பிரபு!
சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட நடிகர் பிரபு!

By

Published : Jan 7, 2023, 7:18 AM IST

சென்னை பூக்கடை காவல் நிலையம் 1876ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த காவல் நிலையமாகும். 2006ஆம் ஆண்டில்தான் இந்த காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, காவல் நிலையம் வெண்மையாக மாற்றப்பட்டது.

சமீபத்தில் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல் நிலையத்தை நடிகர் பிரபு பார்வையிட்டார்

காவல் நிலையத்தின் முகப்பில் டிஜிட்டல் மின்விளக்குடன் கூடிய பெயர்ப்பலகையும் அமைக்கப்பட்டது. காவல் நிலைய வளாகம் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதற்கு காவல் நிலையத்திலேயே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பூக்கடை காவல் நிலையத்துக்கு இந்திய தர கவுன்சில் - இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக, சர்வதேச தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழான ஐஎஸ்ஓ 9001 : 2015 சமீபத்தில் வழங்கி அங்கீகரித்தது.

இந்த நிலையில் நடிகர் பிரபு, பூக்கடை வழியாக படப்பிடிப்புக்கு செல்லும்போது, பூக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்ட பிரபு, காவல் அலுவலர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். பழமையான கட்டடங்கள் மீதான ஆர்வத்தால் நேரில் வந்து பார்வையிட்டதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாக்கியலட்சுமி சீரியல் திவ்யாவின் ட்ரெண்டிங் போட்டோ கலெக்‌ஷன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details