நடிகர் மயில்சாமி தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கட்சி செயல்பாடுகளிலிருந்து மெள்ள மெள்ள வெளியேறினார். பின்னர் அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் அவருடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுவந்தார்.
இதற்கிடையில் கரோனா பேரிடர் காலத்தில் தான் வசித்துவரும், விருகம்பாக்கம் தொகுதியில் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்த இவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தார்.