தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

By

Published : Apr 6, 2021, 6:15 AM IST

நடிகர் கார்த்திக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கார்த்திக் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் தீவிர பரப்புரைசெய்தார்.

கடிதம்

இந்நிலையில் பரப்புரையை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கார்த்திக்கு திடீரென மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக் உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’தேவைகளைக் குறைத்துக்கொண்டால் நிம்மதியாக வாழலாம்’ - நடிகர் கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details