தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எனது உடல்நிலை நன்றாக உள்ளது" - கமல் ஹாசன் - கமல் ஹாசன் உடல் நிலை

தனது உடல்நிலை குறித்து நடிகர் கமல் ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

actor-kamal-haasan-on-his-health-condition
actor-kamal-haasan-on-his-health-condition

By

Published : Nov 25, 2022, 10:42 PM IST

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ள "டிஎஸ்பி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (நவம்பர் 25)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "டிஎஸ்பி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தின் ட்ரைய்லரை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. முன்பெல்லாம் பெரிய விபத்துக்கள் நடக்கும் பொழுது கூட எப்போது சூட்டிங் வருவீர்கள் என்று கேட்பார்கள். அடுத்த படம் எப்போது ரிலீஸ் என்று கேட்பார்கள்.

இப்போது சின்ன இரும்பல் என்றால் கூட பெரிய செய்திகள் எல்லாம் வந்துவிடுகிறது. அதற்குக் காரணம் ஊடகங்கள் மத்தியில் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் எனது நன்றி உரித்தானது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. இந்தியன் 2 அடுத்த கட்ட படப்பிடிப்பு தயாராகி கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பினார்

ABOUT THE AUTHOR

...view details