சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் "விஷ் 22" (Vish 22) என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் துருவ் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது மாணவிகளின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு துருவ் விக்ரம் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
கல்லூரி மாணவிகளுடன் கலகலப்பாக பேசிய துருவ் விக்ரம் - நடிகர் துருவ் விக்ரம் பேச்சு
எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கலந்து கொண்டார்.
Actor
அத்துடன் அவர் எழுதி பாடிய 'மனசே' என்ற ஆல்பம் பாடலையும் பாடினார். பின்னர் நடனமாடி, விழாவை கொண்டாட்டமாக மாற்றினார். நிறைவாக மாணவிகளுடன் தன்னைப்பற்றியும், தன்னுடைய தந்தையான சீயான் விக்ரம் பற்றியும் பல நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டார்.
இதையும் படிங்க: நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும்