சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன் மற்றும் சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் - MK Stalin
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள் அம்மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்து: சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்