தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு லஞ்சம்; லாரி உரிமையாளர்கள் புகார்! - சென்னை அண்மைச் செய்திகள்

தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கச் செல்லும் லாரி உரிமையாளர்கள்
புகார் அளிக்கச் செல்லும் லாரி உரிமையாளர்கள்

By

Published : Oct 22, 2021, 6:41 AM IST

சென்னை: தமிழ்நாடு உணவு, எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்.21) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “சென்னையின் காமராஜர், அண்ணா சாலைகள் உள்ளிட்ட பிரதான இடங்களில் காலை 7 முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் எண்ணூர் - மணலி விரைவு சாலை, மதுரவாயல் வழியாக சுமார் 70 கிலோ மீட்டர்வரை கனரக வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டும்.

இதுவே அண்ணா சாலை அல்லது காமராஜர் சாலையை பயன்படுத்தினால், 30 கி.மீட்டரில் தென் சென்னை பகுதிகளுக்கு சென்று விடலாம். இதனால் சுற்றிச் செல்லுதல், 3 சுங்க சாவடிகளில் பணம் செலுத்துவதை தவிர்க்க, சில நபர்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்து பிரதான சாலைகளில் கனரக வாகனங்களை இயக்குகின்றனர்.

புகார் அளிக்கச் செல்லும் லாரி உரிமையாளர்கள்

தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்களால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறே ஜெமினி மேம்பாலத்தில் எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details