நடிகை விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் சமீப காலமாக பிரச்னை இருந்துவருகிறது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் விஜயலட்சுமியை தகாத முறையில் பேசிவந்தனர். மேலும், ஹரி நாடார் என்பவர் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இந்த காணொலியை பார்த்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் இது எனது கடைசி காணொலி. கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக சீமான் கொடுத்த மன அழுத்தம் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இத்தனை நாள் நான் இருந்தது என் அம்மா என் அக்காவிற்காகத்தான். நான்கு நாள்களுக்கு முன் ஹரிநாடார் என்னை கேவலமாக பேசி அசிங்கப்படுத்துவது எல்லாம் எனக்கு போதும் என்று ஆகிவிட்டது. ஏற்கனவே இரண்டு பிபி மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு லோ பிபி ஆகும் அதன்பிறகு சில மணி நேரத்தில் நான் இறந்துவிடுவேன்.