சென்னை: விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் வசதிக்காக சென்னை விமானநிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 2,100 கார்கள் வரை நிறுத்த முடியும். இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் முடிந்து சமீபத்தில் தான் பயன்பாட்டிற்கு வந்தது.
அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங் பகுதியில். மின்சார வாகனங்களும் நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும், கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்து. பெரும்பாலும் இந்த கார் பார்க்கிங்கில் வெளி நாடுகள் மற்றும் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் அடுக்குமாடி கார் பார்க்கிங்கின் நான்காவது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு இறங்கிய காரும் தரை தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்ற காரும் மோதி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அதிஷ்ட வசமாக ஓட்டுனர் தவிர வாகனத்தில் பயணிகள் இல்லாததால் இழப்புகள் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மோதிய வேகத்தில் நான்காவது தளத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி கார் நின்றது.