தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒரு நபர் உள்பட தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 359 நபர்களுக்கும் கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூன் 24ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டின் மேலும் புதிதாக 26 ஆயிரத்து 689 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 355 நபர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒரு நபர் என ஆயிரத்து 359 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 58 லட்சத்து 14 ஆயிரத்து 406 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 நபர்கள் கரோனா தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 912 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் குணமடைந்த 621 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 21 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 616 நபர்கள், செங்கல்பட்டில் 266 நபர்கள், கோயம்புத்தூரில் 64 நபர்கள், கன்னியாகுமரியில் 62 நபர்கள், காஞ்சிபுரத்தில் 50 நபர்கள், திருவள்ளூரில் 71 நபர்கள் என 34 மாவட்டங்களில் நோய்த் தொற்றுப் பாதிப்பு இருந்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்குத் தடையான தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்' - முரசொலி தலையங்கம்