இதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பில், ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமண பால், ஐஸ் கிரீம் உள்ளிட்டப் பால் உபபொருள்களை சென்னையில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அதில் 21 பாலகங்கள் குளிர் சாதன வசதி, சிறுவர் விளையாட்டு பூங்கா, இலவச இணையம் உள்ளிட்ட வசதிகளுடன் அதிநவீன பாலகங்களாக (Hi-Tech Parlour) இயங்கி வருகின்றன.
தற்போது அந்த அதிநவீன பாலகங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளைத் தேடிச் சென்று பால், பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக ZOMATO (சொமட்டோ), DUNZO (டன்சோ) நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனம் இணைந்து சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சொமட்டோ, டன்சோ நிறுவனங்கள் மூலம் ஆவின் பால், பால் உபபொருள்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.
ZOMATO, DUNZO மூலம் வீடு தேடி வரும் ஆவின் பால் - தமிழ்நாடு அரசு - சொமட்டோ, டன்சோ மூலம் ஆவின் பால்
சென்னை: ஊரடங்கு காரணமாக ஆவின் பால் தடையின்றி மக்களுக்கு கிடைக்க சொமட்டோ, டன்சோ நிறுவனங்களுடன் இணைந்து வீடு தேடி விநியோகிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
tamil-nadu-government-through-zomato-danzo
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகரப் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பால், பால் உபபொருட்கள் கிடைக்க ஆவின் நிறுவனம் இந்த ஏற்பாடு செய்துள்ளது. எனவே பொது மக்கள், வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாண்புமிகு பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எப்போதும்போல் ரத்ததானம் செய்யலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு