சென்னை: ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த மற்றும் கலக்காத வெண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், உப்பு கலக்காத 100 கிராம் வெண்ணெய் விலை 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் வெண்ணெய் விலை 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் வெண்ணை விலை உயர்வு - ஆவின் புதிய வெண்ணெய் விலை
ஆவின் வெண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்குவருகிறது.
ஆவின் வெண்ணை விலை உயர்வு
அதேபோல, உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் விலை 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் வெண்ணெய் விலை 255 ரூபாயில் இருந்து 265 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று (டிசம்பர் 17) முதல் அமலுக்குவருகிறது. முன்னதாக ஆவின் பால், தயில், நெய் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆவின் பாலை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு