சென்னை: நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் மோசடி செய்து, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கும் மேல் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவர்கள் 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டனர். மேலும், அவர்களது புகைப்படத்தை வைத்து, அவர்களது விவரங்களை கொடுக்குமாறு பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.