பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி ப்ரியா, டிஜிபி அலுவலகத்தில் ஆடை படத்திற்கு எதிராக மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் அமலாபால் தமிழ் நாகரிகம் தெரியாதவர் என்றும் வேறு மாநிலத்தவர் சேர்ந்தவர் என்பதால் நாகரிகம் பற்றி தெரிய வாய்ப்பில்லை என பேசியிருந்தார். இதனை எதிர்க்கும் வகையில் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
அமலா பாலை தவறாக பேசிய ராஜேஷ்வரி பிரியா மீது நடவடிக்கை - ஆணையரிடம் புகார்
சென்னை: பிற மாநில பெண்களை பற்றி இழிவுப்படுத்தும் விதமாக பேசிய அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி ப்ரியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் ப்ரியா காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
aadai movie producer
மற்ற மாநில பெண்களை ராஜேஷ்வரி பிரியா இழிவாக பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒன்றுதான். திரைத்துறையில் அனைத்து மாநிலத்தவரும் அடங்கிய தென்னிந்திய நடிகர்கள் என வைத்துள்ளோம். ஆனால் இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ராஜேஷ்வரி பிரியா பேசியுள்ளார். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.