சென்னை:பெசன்ட் நகர் கடற்கரையில் காவல் மீட்புக் குழுவினர் நேற்று (டிசம்பர் 21) பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குப் பேசிக்கொண்டிருந்த நபர்களில் ஒரு இளைஞர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றதால் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கத்திக் கூச்சலிட்டனர்.
அப்போது, பொதுமக்களின் கூச்சலைக் கேட்டு அங்குப் பணியிலிருந்த பெசன்ட் நகர் காவல் மீட்புக் குழு காவலர்கள் சபின், ராஜா ஆகியோர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு கரைக்கு அழைத்துவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ரேலங்கி பணீந்திர குமார் (30) என்பதும், அவர் சென்னையில் வேலைசெய்யும் பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது.