தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கம்பத்தில் பாதுகாப்பின்றி இருந்த வயரில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - Youth dies due to electrocution

சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் பாதுகாப்பின்றி இருந்த வயரில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

சாலையில் உள்ள மின்கம்பத்தில் இருந்த வயரில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சாலையில் உள்ள மின்கம்பத்தில் இருந்த வயரில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

By

Published : Oct 26, 2022, 5:25 PM IST

சென்னை: சென்னை மடிப்பாக்கம் பிரதான சாலை, தந்தைப் பெரியார் நகர் பகுதியில் பள்ளிகரணையைச் சேர்ந்த இளவரசன்(33), என்ற நபர் இரவு சாப்பிடுவதற்காக சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது சென்டர் மீடியன் நடுவே பொருத்தியிருந்த மின்விளக்கில் மின் வயர்கள் முறையான பாதுகாப்பின்றி வெளியில் தெரியும் அளவிற்கு இருந்துள்ளது.

இதனை தெரியாமல் மிதித்ததில் இளவரசன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். உடன் வந்த நண்பர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பக்கத்து வீட்டுக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தாய், மகள் கைது

ABOUT THE AUTHOR

...view details