தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” வைரலாகி வரும் பாடல்..! - விஸ்வாசம்

கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் " பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

By

Published : Nov 7, 2022, 7:29 AM IST

Updated : Nov 7, 2022, 9:14 AM IST

விஜய் ஆண்டனியின் "நான்" திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடலை எழுதிய தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தான் இப்பாடலை எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின. ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக விக்ரமசிங்கே இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலகே பாடலைப் பாடியுள்ளார். மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாடலைக் காண: 🔗 ▶️ https://youtu.be/xk5s4JMqwkA

Last Updated : Nov 7, 2022, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details