சென்னை:சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள ட்ரீ பவுண்டேஷன் என்ற கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுப்ரஜா தாரணி என்பவருக்கு அப்பகுதி மீனவர்கள் கடலில் திமிங்கல சுறாவை பார்த்ததாக கூறியுள்ளனர். தகவலின் அடிப்படையில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுப்ரஜா தாரணி மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு சென்று சுமார் 15 முதல் 18 அடி உள்ள திமிங்கல சுறாவை பார்த்ததும் ஆச்சிரியமடைந்தார்.
கடலில் திமிங்கலம் சுறா ஒரே இடத்தில் வெகு நேரமாக இருந்ததை பார்த்த அவர்கள் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று மீனவர்கள் கடலில் குதித்து பார்த்தபொது எந்த ஒரு காயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர், அங்கேயே படகை நிறுத்தி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் அருகில் வந்து சிறிது நேரல் திமிங்கல சுறா வட்டமிட்டு சென்றதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஜூன் 9, 10-ஆம் தேதி அன்று நீலாங்கரை கடலில் சுமார் 6, 7 திமிங்கல சுறாவை பார்த்ததாகவும், ஜூன் 17-ஆம் தேதியும் கடலுக்கு சென்ற போது முன்பு பார்த்த திமிங்கலம் சுறா இல்லாமல் வேறு ஒரு திமிங்கல சுறாவை பார்த்ததாகவும் மீனவர்கள் கூறினார்.
இதையும் படிங்க:ஜூன் 26 ஆம் தேதி சித்தூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் பேட்டி