சென்னை:பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில், விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் மீட்கப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகிலேயே குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
குப்பைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி தீ வைத்துவிட்டு செல்வதால், பறிமுதல் செய்து வைக்கப்பட்ட வாகனங்களும் தீ பிடித்து எரிவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சூழலில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் இன்றும் தீ பிடித்து எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதையடுத்து, அந்த வழியாக சென்ற போக்குவரத்து காவலர் அருகில் இருந்த கம்பெனியில் இருந்து பைப் மூலம் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தீ பிடித்து எரிந்த வாகனம்; தனி ஆளாக நின்று அணைத்த போலீஸ்காரர் இதையும் படிங்க:தேனி முதல் தேசிய அகாடமி வரை - போலீஸ் தமிழனின் புதிய பதவி இதுதான்!