சென்னை: திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கோயிலில் அமர்ந்து, தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளார். இளைஞரின் இந்த செயல் கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. பின்னர், ஆபாசப்படத்தை பார்த்ததை அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் கோயில் தரப்பினர் உறுதிசெய்தனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் உடனே வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றார். கோயில் குருக்கள் பிரசாத், இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.