சென்னை: சென்னை ராயபுரம் சாந்தி காலனியைச் சேர்ந்தவர்குற்றவாளி சீனிவாசன் (வயது 48) ஆவார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ரேஷன் கடைக்குச் சென்று வீடு திரும்பிய தமிழரசி என்னும் பெண்ணிடமிருந்து, 8 சவரன் தங்க நகையைப் பறித்து அவரை தாக்கி உள்ளார். எனவே, இந்த வழக்கில் கண்ணன் குறிச்சி போலீஸார் சீனிவாசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திருட்டு மற்றும் பெண்ணைத் தாக்கிய குற்றத்திற்காக, கடந்த 16ஆம் தேதி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றவாளி சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பின் அடிப்படையில், குற்றவாளி சீனிவாசன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (மே 19) சேலம் சிறையில் அடைக்கப்பட்ட கைதி சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. எனவே, நேற்று மதியம் போலீஸார் அவரை புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். ஆனால், புழல் மத்திய சிறை நுழைவுவாயிலில் வரும்போது கைதி சீனிவாசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.