தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்ச்சையில் யோகி பாபு படம்: திரைப்படத்தை திருடி பெயரை மாற்றி சென்சார் செய்ததாக குற்றசச்சாட்டு... - தாதா

வெளிவராத திரைப்படத்தின் ஹார்ட்டிஸ்கை திருடி, படத்தின் பெயரைமாற்றி புதிதாக தணிக்கை சான்றிதழ் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு
யோகி பாபு

By

Published : Jul 23, 2022, 11:02 AM IST

சென்னை: விருகம்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் துரைராஜன். இவர் ஆர்.ஆர் சினி புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 23) புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞரும், இணை தயாரிப்பாளருமான விஜய் போஸ், “ஆர்.ஆர் சினி புரோடக்‌ஷன்ஸ் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு 5 கோடி ரூபாய் செலவில் நடிகர் நிதின் சத்யா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் 'மணி' என்ற திரைப்படத்தை தயாரித்தோம்.

மேலும், அப்போது எங்கள் படதயாரிப்பு நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த விருகம்பாக்கத்தை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் குமார் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்ததால் அவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தோம்.

இதைத்தொடர்ந்து, அவ்வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கிஷோர் குமார், குண்டர்கள் சிலருடன் ஆர்.ஆர்.சினி பட நிறுவன அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் 'மணி' திரைப்படத்தின் மொத்தக்காட்சி அடங்கிய ஹார்ட்டிஸ்கை திருடி சென்றார்.

வெளிவராத திரைப்படத்தை திருடி படத்தின் பெயரை மாற்றி தணிக்கை சான்றிதழ் பெற்று மோசடி...

இதுகுறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து கிஷோர் குமார் உயர்நீதிமன்றத்தில் அன்னை தெரசா நிறுவனத்தின் தயாரிப்பில் 'மணி' என்ற படத்தைதான் தயாரித்ததாக பொய்யான வழக்கு தொடந்ததார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் கடைசி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கிஷோர் குமார் திருடிய 'மணி' படத்தின் ஹார்ட்டிஸ்கை பயன்படுத்தி, 'எனி டைம்ஸ் மணி பிளிம்ஸ் என்ற மணி' படத்தலைப்பை 'தாதா' என்று பெயர் மாற்றம் செய்து தணிக்கைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், இதுகுறித்து படத்தில் நடித்த காமெடி நடிகர் யோகி பாபுவும் கண்டனம் தெரிவித்துள்ளார், அதன் ஆடியோவும் உள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட படத்தை பெயரை மாற்றி வெளியிட அனுமதித்த தணிக்கை குழு மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 'தாதா' என்ற படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். 'மணி' திரைப்படத்தின் ஹார்ட்டிஸ்கை பெற்று தந்து கிஷோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் ’நாச்சியம்மா’

ABOUT THE AUTHOR

...view details