தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சென்னையில் காவலர் தற்கொலை! - தற்கொலை எண்ணம் வேண்டாம்

சென்னை ஆவடியில் படைநீக்கம் செய்யப்பட்டதால் காவலர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 12, 2023, 11:42 AM IST

சென்னை:ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுனராக இருந்தவர் வள்ளிநாயகம்(வயது 32). இவர் 2013-இல் காவலராக பணியில் சேர்ந்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஐந்தாம் தேதி திருமுல்லைவாயில் ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது முன்பக்க டயர் வெடித்ததால் சாலை சென்டர் மீடினயில் வாகனத்தை இடித்ததாக புகார் எழுந்த நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், மன அழுத்தத்திலிருந்த காவலர் வள்ளிநாயகம் திருமுல்லைவாயல் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் காவலரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த வள்ளிநாயகத்திற்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு உதவி எண்:தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வல்ல. உங்களுக்குத் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் தோன்றினாலோ அல்லது மன உளைச்சலிலிருந்தாலோ 1098 என்ற தற்கொலை தடுப்பு உதவி மைய எண் மற்றும் 9152987821 என்ற உதவி என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.

இதையும் படிங்க: சென்னையில் சித்த மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; 2 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details