தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெரு

சென்னையின் தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு...!
தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

By

Published : Sep 24, 2022, 3:39 PM IST

சென்னை: தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். நேற்றிரவு இவரது வீட்டின் வாசலில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சீதாராமன் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் பெட்ரொல் குண்டு வீசியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு...!

இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க:பண மோசடி வழக்கில் தலைமறைவு...சென்னை விமான நிலையத்தில் மும்பை தொழிலதிபர் கைது

ABOUT THE AUTHOR

...view details