தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - உயிரிழப்பு - இண்டிகோ ஏர்லைன்ஸ்

சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த விமானத்தில் பீஹாா் மாநிலத்தை சோ்ந்த பயணி திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதனால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமானது.

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீா் நெஞ்சு வலியால் உயிரிழப்பு
சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீா் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

By

Published : Jun 29, 2022, 11:32 AM IST

சென்னை: கொழும்புவுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 137 பயணிகள் பயணித்தனர். அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. விமானம் ஓடுபாதையில் ஓடத் தயாரானது.

அந்த நேரத்தில் அந்த விமானத்தில் இலங்கைக்குப் பயணித்துக் கொண்டிருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங் (47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனடியாக விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஓடுபாதையில் ஓடவேண்டிய விமானத்தை ஓடாமல் விமானி நிறுத்தி வைத்தார்.

உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் கூறினர்.

பிறகு அவரை விமானத்தை விட்டு கீழே இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள திலீப்குமாா் சிங் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 136 பயணிகளுடன் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் தூக்கி சென்ற கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details