சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளுக்கு செல்லும் வகையில், பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட புதிய வண்ணப் பலகைகளும், ப்ரெய்லி நடைபாதைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள், அதிகாரிகள் அறை மட்டுமல்லாது கழிவறை படிக்கட்டுகள், சாய்தள படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களிலும் அது குறித்த பலகை வைக்கப்பட்டுள்ளது.