தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவதாம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நிறைவு! - அதிமுக
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்தக் கூட்டத்தில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடிநீர் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கடுமையான கேள்விகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
Last Updated : Jun 28, 2019, 6:16 PM IST