தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையில் இருந்த நண்பனை காணச் சென்றவருக்கு புழல்.. நடந்தது என்ன?

Puzhal Jail: சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நண்பனைப் பார்க்கச் சென்ற நபர், கஞ்சா பொட்டலத்தை தூக்கி வீசியதால் புழல் சிறையிலேயே அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறை
சென்னை புழல் சிறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:12 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த மெஹபூல்பாஷா என்பவர், பெரும்பாக்கம் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெஹபூல்பாஷாவை பார்ப்பதற்காக காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் அருண்குமார் (21) புழல் சிறைக்கு வந்துள்ளார்.

பார்வையாளர் அறை வழியே கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலத்தை நண்பனை நோக்கி தூக்கி வீசியுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்கள் அதனை தடுக்க முற்பட்டபோது, அருண்குமார் சிறை காவலர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பொட்டலத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த சிறைக் காவலர்கள், அருண்குமாரை கைது செய்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புழல் விசாரணை சிறை அலுவலர் சரண்யா அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வப்போது சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறைக் காவலர்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நண்பனைப் பார்க்கச் சென்ற நபர், கஞ்சா பொட்டலத்தை தூக்கி வீசியதால் புழல் சிறையிலேயே அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!

ABOUT THE AUTHOR

...view details