சென்னை விமான நிலையத்தில் காதலியை விமானத்திற்குள் சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பிய காதலனிடம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.எஸ்.எஃப் காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், போலி டிக்கெட் மூலம் உள்ளே சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த நபரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலி பயணச்சீட்டுடன் விமானநிலையத்திற்குள் நுழைந்த காதலனால் பரபரப்பு! - love
சென்னை: போலி பயணச்சீட்டுடன் காதலியை விமானத்தின் உள்ளே சென்று வழியனுப்பிவிட்டு வெளியே வந்த காதலனை, சி.எஸ்.எஃப் காவல்துறையினர் கைது செய்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சென்னை மேத்தா நகரைச் சேர்ந்த வருண்(30) என தெரியவந்துள்ளது. இவர், தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருவதாகவும், அவர் இன்று தனது காதலியை திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி டிக்கெட்டுடன் தனது காதலியை வழியனுப்பி வைப்பதற்காக வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருண் மீது 470, 447 என்ற பிரிவுகளில் ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது என வருண் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.