சென்னை:பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (நவ.03) காலை ஊழியர் ஒருவர் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்த போது கடை உரிமையாளரைப்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து, ஊழியர் கடையின் உள்ளே சென்ற நேரம் பார்த்து கல்லாப்பெட்டியில், இருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.