தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொக்லைன் இயந்திரம் அருகே உறங்கியவர் உடல் நசுங்கி உயிரிழப்பு - பொக்லைன் வாகனம் ஏறி ஒருவர் இறப்பு

சென்னை மெரினாவில் பொக்லைன் இயந்திரம் அருகே படுத்து உறங்கியவர் மீது எதிர்பாராத விதமாக வாகனத்தின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.

பொக்லைன் இயந்திரம் அருகே உறங்கியவர் உடல் நசுங்கி உயிரிழப்பு
பொக்லைன் இயந்திரம் அருகே உறங்கியவர் உடல் நசுங்கி உயிரிழப்பு

By

Published : Mar 7, 2022, 7:19 AM IST

சென்னை: மெரினாவில் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். வேலை முடிந்து முகத்துவாரம் அருகே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் அருகே, பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கும் தொழிலாளி ஏழுமலை (55) படுத்து உறங்கியுள்ளார்.

இதை கவனிக்காத ஓட்டுநர் வேல்முருகன், பொக்லைன் இயந்திரத்தை பின் பக்கமாக இயக்கியுள்ளார். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் சக்கரத்தில் ஏழுமலையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர், ஏழுமலையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் காவல் துறையினர், பொக்லைன் ஓட்டுநர் வேல்முருகனை கைது செய்தனர்.

இதையும் படிங்க:கே.ஜி.சாவடி அருகே விபத்து - பரிதாபமாக உயிரிழந்த இரு குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details