தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த கோயம்பேடாக மாறும் அபாயத்தில் காசிமேடு? - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: காசிமேட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், அடுத்த கோயம்பேடாக, அப்பகுதி மாறி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

அடுத்த கோயம்பேடாக மாறிவிடுமோ காசிமேடு?
அடுத்த கோயம்பேடாக மாறிவிடுமோ காசிமேடு?

By

Published : Jun 1, 2020, 2:37 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை.

நேற்று மட்டும் ஒரே நாளில் தமிழ்நாட்டில் 1149 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு அரசு நிபந்தனைகளுடன் சில தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த மீன் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் வாங்குவதற்காக காசிமேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல் சென்றுள்ளனர்.

அங்கு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக காவல் துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், கூட்டம் அதிகரித்ததால் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர்.

அக்கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா இருந்தால் கூட, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே கோயம்பேடு சந்தை மூலமாக, கிட்டத்தட்ட 2000த்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், அடுத்த கோயம்பேடாக, காசிமேடு மாறி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details