சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இயற்கையான சூழலில் 170 வகையிலான விலங்குகளுடன் 1,265 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2005ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு மனிதக் குரங்குகள் உள்ளன.
கோம்பி, கௌரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு குரங்குகளும், செயற்கை குகையில் அடைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இவைகளுக்குள் காதல் மலர்ந்துள்ளது. அதன் பலனாக, கருவுற்ற கௌரி குரங்கு, 230 நாள் முதல் 240 நாள் கர்ப்ப காலம் முடிந்து, கடந்த 9ஆம் தேதி அழகான மனித குரங்குக் குட்டி ஒன்றை ஈன்றது.